

திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிகின்றனர். வருமான வரி செலுத்துவோருக்கு அவர்கள் தாக்கல் செய்த கணக்கில் தவறு இருந்தால் அதை சரி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். வருமான வரி தாக்கல் செய்வோர் தாக்கல் செய்த கணக்குகளில் திருத்தம் இருந்தால் அதனை சரி செய்து திருத்தங்கள் மேற்கொள்ளலாம். அவ்வாறு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. கூடுதல் வருமானத்தைக் கணக்கில் காட்டி கூடுதலாக வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.