கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் காலாண்டு லாபம் ரூ.185 கோடி

கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் காலாண்டு லாபம் ரூ.185 கோடி
Updated on
1 min read

சென்னை: கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.185 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

இது கடந்த 18 காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச லாபம் ஆகும் என்று வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.35 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வருமானம் 18 % அதிகரித்து ரூ.687 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுஇதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.584 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் 9 மாதங்களில் வங்கியின் நிகர லாபம் 80 சதவீதம் அதிகரித்து ரூ.460 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.255 கோடியாக இருந்தது.

9 மாத காலத்தில் வட்டி மீதான வருமானம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.2,005 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வட்டி மீதான வருமானம் ரூ.1,747 கோடியாக இருந்தது.

வங்கியின் நிர்வாக செலவினம் ரூ.1,380 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.1,407 கோடியாக இருந்தது. இது தற்போது குறைந்துள்ளது.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.1,22,664 கோடியாகும். 7.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வர்த்தகம் ரூ.1,16,098 கோடியாக இருந்தது. டெபாசிட் மூலமான வருமானம் ரூ.4,782 கோடி அதிகரித்து ரூ.66,871 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் திரட்டப்பட்ட டெபாசிட் ரூ.62,089 கோடியாகும்.

இதேபோல வழங்கப்பட்ட கடன் அளவு 7.1 சதவீதம் அதிகரித்து ரூ.55,793 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட கடன் அளவு ரூ.52,113 கோடியாகும். நகைக்கடன் அளவு 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,649 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர வாராக் கடன் ரூ.1,719 கோடியிலிருந்து ரூ.1,356 கோடியாகக் குறைந் துள்ளது என்று கேவிபி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in