

19 கோடி டாலர் (ரூ. 126 கோடி) மதிப்பிலான மாண்டேலெஸ் சாக்லெட் உற்பத்தி ஆலையை ஆந்திரப்பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஸ்ரீசிட்டியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் மாண்டேலெஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் சந்திரமௌலி வெங்டேசன், மாண்டேலெஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டேனியல் மைர்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முன்னர் கேட்பரி இந்தியா லிமி டெட் என்ற பெயரில் செயல் பட்ட இந்நிறுவனம் இனி மாண்டே லெஸ் இந்தியா என்ற பெயரில் செயல்படும். புதிதாக தொடங்கப் பட்ட ஆலையில் ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் சாக்லெட்டை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. 2020-ல் இதன் உற்பத்தி 2.5 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையாக விரிவாக்கம் செய்யப்படும்போது 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
134 ஏக்கரில் இடத்தில் இந்த ஆலை அமைந்துள்ளது. ஆனால் இதுவரை 35 சதவீதம் இடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த சில ஆண்டுகளுக்குள் முழுமையாக விரிவாக்கம் செய்வோம் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமௌலி வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்தியா எங்களுடைய முக்கியமான சந்தையாகும். இந்தியாவில் சாக்லேட் நுகர்வு சர்வதேச அளவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் எதிர்காலத்துக்காக இப்போது முதலீடு செய்கிறோம் என்றார். சாக்லேட் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளாக கோக்கோ இந்தியாவில் பயிரிடப் பட்டாலும், 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியை குறைப்பதற்காக உள்நாட்டில் கோக்கோ பயிரிடு வது குறித்து வேளாண் பல்கலை கழகங்களுடன் இணைந்து மாண்டேலெஸ் செயல்பட்டு வருகிறது.
இந் நிறுவனம் 165 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3000 கோடி டாலர் ஆகும்.