Published : 30 Jan 2022 07:26 AM
Last Updated : 30 Jan 2022 07:26 AM
கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியா 22.9 மில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34% அதிகம். 2019-ல் இந்தியா 17.1 பில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது.
அதேபோல சீனாவிலிருந்து இந்தியா பெற்ற இறக்குமதியும் 2021-ம் ஆண்டில் 28% அளவில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 87.5 பில்லியன் டாலர் அளவில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. 2019-ம் ஆண்டில் அது 68.4 பில்லியன் டாலராக இருந்தது.
2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மூலப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேசமயம் நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி 14.7-லிருந்து 10.4% ஆக குறைந்துள்ளது.
2021-ல் இந்தியா – அமெரிக்கா இடையே 112.3 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடை பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியா - சீனா இடையில் சென்ற ஆண்டு 110.4 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் 68.4 பில்லியன் டாலர், சவூதி அரேபியாவுடன் 35.6 பில்லியன் டாலர் அளவில் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT