இன்பிபீம் பங்கு வர்த்தகம் இன்று தொடங்குகிறது

இன்பிபீம் பங்கு வர்த்தகம் இன்று தொடங்குகிறது
Updated on
1 min read

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கு வெளியீட்டை இன்பிபீம் கடந்த மார்ச் 21-23 ஆகிய தேதிகளில் வெளியிட்டது. இந்த நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்குகின்றன.

ஒரு பங்கின் விலையாக ரூ.360-432 என நிர்ணயம் செய்யபட்டது. 1.1 மடங்குக்கு விண்ணப்பங்கள் பரிந்துரையாயின. இதன்மூலம் இந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் திரட்டியது. இந்த பங்கு பிஎஸ்இ-யில் பி குரூப் பங்குகள் பிரிவில் வர்த்தகமாகும்.

2007-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கிடைக்கும் நிதியில் லாஜிஸ்டிக்ஸ் மையம், மென்பொருள் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in