

இரு சக்கர வாகனம் மற்றும் கார்களுக்கான பிரீமியம் இன்று முதல் 40 சதவீதம் வரை உயர் கிறது. காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ பிரீமியத்தை உயர்த்த முடிவெடுத் திருக்கிறது.
சிறிய வகை கார்களுக்கு 39.9 சத வீதமும், நடுத்தர கார்களுக்கு 40 சதவீதமும், பிரீமிய ரக கார் களுக்கு 25 சதவீதமும் உயர்த்தப் பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 75சிசிக்கு குறை வானவற்றுக்கு 9.5 சதவீதமும், 75 சிசி முதல் 150 சிசி வரை 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. 150 சிசி முதல் 350 சிசி உள்ள வாகனங்களுக்கு 25 சதவீதமும் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது, மாறாக 350 சிசிக்கும் மேல் உள்ள வாகனங்களுக்கு பிரீமியம் குறைக்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாட்டு வாகனங் களுக்கு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட் டுள்ளது. அதே சமயம் 12 டன் வரை கையாளும் சரக்குகளை கையாளும் வாகனங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.