

பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து வலுப்படுத்திய பிறகு வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இருப்பதாக என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச நிதி கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
நாங்கள் தற்போது வங்கிகளில் ஏற்கெனவே உள்ள வளங்களை வைத்து மறுமுதலீடு செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மறுமுதலீடு செய்வதற்கு கூடுதல் வளங்களை பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். ஒருதரம் வங்கிகள் பலப்படுத்தப்பட்டால் சில வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்.
ரிசர்வ் வங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குறிப்பிட்ட திசையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நம்முடைய அடிப்படை பொருளாதார அளவுகோல்கள் இதே திசையிலேயே தொடர வேண்டும். அதனால் வளர்ச்சி விகிதத்தை இதே போல் தொடர வேண்டும். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு பெரும்பான்மையான அரசு மற்றும் உறுதியான தலைமையின் முடிவு இதை ஏற்படுத்துவது ஒன்றும் கடினமல்ல என்று நான் நினைக்கிறேன்.
வெளிப்படைத்தன்மை
மேலும் அவர், மத்திய அரசு தொழில் புரிவதற்கான உகந்த சூழ்நிலையை நாட்டில் உருவாக்குவதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. முடிவு களை எடுப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். மேலும் முடிவுகளை விரைவாக எடுக்கவும் முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்வதற்கு உரிய வரைவு திட்டங்களை தொடங்க இருக்கிறது என்று அறிவித்தார். இதற்கு இந்த நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
மேலும் அவரது அறிவிப்பில் இந்த வங்கிகளுக்கு கூடுதல் முதலீடு தேவைப்பட்டால் அதற்குரிய வழிகளை மத்திய அரசு ஆராயும் என்று தெரிவித்தார்.
மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்தது இந்தியாவுக்கு சாதமாக அமைந்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஏற்று மதியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத் தில் வீழ்ச்சி என்பது நிலையற்றதும் கணிக்கமுடியாததுமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
சமீபத்தில் மத்திய அரசு மாநில வங்கிகளை பலப்படுத்தும் நோக்கோடு இந்திரதனுஷ் திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் 4 வருடங்களில் மாநில வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் அளிக்க இருக்கிறது. மேலும் அவர்கள் முதலீட்டு தேவைகளுக்கு பங்குச் சந்தையின் மூலம் 1.1. லட்சம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் அளித்தது. இந்த நிதியாண்டும் பொதுத்துறை வங்கிகளில் 25,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின்படி 2017-18ம் நிதியாண் டில் 10,000 கோடி ரூபாயும் 2018-19ம் ஆண்டு 10,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.