கடந்த நிதி ஆண்டில் 14 ஐபிஓ மூலம் ரூ.14,461 கோடி திரட்டல்

கடந்த நிதி ஆண்டில் 14 ஐபிஓ மூலம் ரூ.14,461 கோடி திரட்டல்
Updated on
1 min read

முந்தைய நான்கு நிதி ஆண்டு களாக பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அதிகளவில் நிதி திரட்டப்படாத சூழலில் கடந்த நிதி ஆண்டில் (2015-16) 24 நிறுவ னங்கள் ஐபிஓ மூலம் ரூ.14,461 கோடி நிதி திரட்டியுள்ளன.

இந்த நிலை நடப்பு நிதி ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. `செபி’-யிடம் ஏற்கெனவே 25 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட அனுமதி வாங்கி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் திரட்டும் நிதி தோராயமாக 12,500 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரணவ் ஹால்தியா தெரிவித்தார்.

தவிர மேலும் சில நிறுவனங்கள் ஐபிஓ-க்காக விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2014-15) 8 நிறுவனங்கள் மட்டுமே ஐபிஓ வெளியிட்டன. இதன் மூலம் 2,770 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது. 2010-11-ம் ஆண்டுக்கு 33,098 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அதன் பிறகு ஐபிஓ மூலம் அதிக நிதி திரட்டப்பட்டிருப்பது கடந்த நிதி ஆண்டில்தான்.

கடந்த வருடம் வெளியான ஐபிஓவில் இண்டிகோ நிறுவனம் 3,017 கோடி ரூபாய் திரட்டியதே அதிகமாகும். வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு உள்ள பல நிறுவனங் களும் ஐபிஓ வெளியிட்டன.

எஸ்எம்இ

அதேபோல எஸ்எம்இ பங்குச்சந்தையிலும் கடந்த நிதி ஆண்டில் 50 எஸ்எம்இ நிறுவனங்கள் 311 கோடி ரூபாயை திரட்டின. முந்தைய நிதி அண்டில் 38 எஸ்எம்இ நிறுவனங்கள் 250 கோடி ரூபாயை திரட்டின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in