டாடா ஸ்டீல் ஐரோப்பிய பிரிவை கிரேபுல் வாங்குகிறது

டாடா ஸ்டீல் ஐரோப்பிய பிரிவை கிரேபுல் வாங்குகிறது
Updated on
1 min read

டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந் தமான ஐரோப்பிய ஆலையை முதலீட்டு நிறுவனமான கிரேபுல் வாங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை கிரேபுல் கேபிடல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங் கும் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஸ்டீல் ஆலை களை விற்க டாடா ஸ்டீல் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஆலை யில் 4,400 பேரும் பிரான்சில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மையத்தில் 400 பேரும் பணிபுரிகின் றனர். ஆலை மற்றும் அதற்கு சொந்த மான இடங்கள் அனைத்தையும் கிரேபுல் வாங்குவதோடு நிறுவனத் துக்கு உள்ள கடன் சுமையையும் ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான நடைமுறை முடிவு பெற் றால் இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in