

சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக பசுமை மின்வழித் தடங்கள் அமைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 20 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை விநியோகிக்கும் பசுமை மின்வழித் தட திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்கட்டமாக, தமிழகம், குஜராத் உள்பட 7 மாநிலங்களில் ரூ.12 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பசுமை மின்வழித் தடங்கள் அமைக்க மத்திய அரசு ரூ.716கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.