

மெகா ரயில் திட்டங்களை கண்காணிப்பதற்காக ஆளில்லா சிறு விமானங்களை (டிரோன்) இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் 42 கிலோமீட்டர் ரயில்பாதைகள் மற்றும் பிஹாரில் அமைக்கப் பட்டு வரும் 56 கிலோமீட்டர் ரயில் பாதை பணிகளை கண்கா ணிக்க டிரோன்கள் பயன்படுத்தப் பட்டதாக பிரத்யேக சரக்கு பாதை (டிஎப்சி) திட்டத்தின் நிர்வாக இயக்குநர் ஆதேஷ் சர்மா கூறினார். சோதனை அடிப்படை யில் மூன்று நாட்களுக்கு 98 கிலோ மீட்டர் பாதை களை கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத் தப்பட்டன. அதன் வீடியோ காட்சி களை ஆராய்ந்த பிறகு எவ்வ ளவு பணிகள் நடந்தன என்ற அறிக்கையை தயார் செய்வோம் என்றார்.