Published : 19 Jan 2022 11:47 AM
Last Updated : 19 Jan 2022 11:47 AM

தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் முதலிடம் பிடித்தது: தமிழகத்தில் 9 மாதங்களில் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு

டி.இ.ராஜசிம்மன்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. நடப்பு நிதி ஆண்டில் (2021-22) முதல் 9 மாதங்களில்(ஏப்-டிச.) மிக அதிக அளவிலான முதலீடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 9மாதங்களில் மேற்கொள்ளப்பட்டமுதலீடு ரூ.1,43,902 கோடியாகும்.இவை 304 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீட்டு அளவு ரூ.36,292 கோடி. நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,07,610 கோடிகூடுதலாக முதலீடு செய்யப்பட் டுள்ளது.

குஜராத் மாநிலம் இந்தவரிசையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மேற்கொள்ள முதலீடு ரூ. 77,892 கோடி. 3-ம் இடத்தில் உள்ள தெலங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 65,288 கோடி.

டாடா குழுமம், ஜேஎஸ்டபிள்யூ ரினியூவபிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிவிஎஸ் மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில்முதலீடு செய்துள்ள நிறுவனங் களில் முக்கிய மானவையாகும்.

தமிழக அரசின் சிறந்த கொள்கை

``மாநிலத்தில் நிலவும் சிறந்ததொழில் கொள்கை மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உடனடியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறை ஆகியனவும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியக்காரணிகளாக உள்ளன. இவை அனைத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ள கருத்துகளாகும். தொழில் துறையினரின் பிரச்சினைகளைக் கேட்பது மற்றும் அவற்றை தீர்ப்பதில் உரிய நடவடிக்கை எடுப்பது ஆகியனவும் முக்கிய காரணங்கள்’’ என்று தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.

``மாநில அரசு மேற்கொள்ளும் முடிவுகளில் முக்கியமானது நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகை. இவை உடனடியாகவும் விரைவாகவும் எடுக்கப்படு கின்றன. கரோனா தொற்று காலத்திலும் முடிவுகளை விரைவாக எடுப்பதால் பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கப்படாத சூழல் உருவானது,’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்றதும் பல முக்கியமான கொள்கை முடிவுகளை வெளி யிட்டது. குறிப்பாகபின்டெக், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகை, டேட்டா மையம்உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் முதலீடுகளை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.

``கரோனா காலத்திலும் மாநில அரசு தொழில்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, தொழில் புரிவதற்குரிய சூழலை மாநிலத்தில் உருவாக்கிபிற மாநிலங்களை விட சிறப்பான சூழலை உருவாக்கித் தந்துள்ளது. தொழில் புரிவதற்குஉரிய சூழலை எளிமையாக் குவது, முக்கியமாக உயிரி தொழில்நுட்பம், மருத்துவ கருவிகள் உற்பத்தி, மரபு சாரா எரிசக்தி உள்ளிட்ட வளரும் தொழில் துறைகளை ஊக்குவித்ததும் முதலீடுஅதிகம் வர காரணம்,’’ என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவரும் காவேரி மருத்துவமனையின் நிறுவன தலைவருமான எஸ்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நம்பகத்தன்மை

``தற்போது மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் மீது சர்வதேச அளவில் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொழில் துறை தலைவர்களும் அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடு காரணமாக நேரடி அந்நிய முதலீடு (எப்டிஐ) அதிக அளவில் தமிழகத்துக்கு வந்துள்ளது’’ என்று கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மற்றும் அதிகாரிகள் நிலையிலான தலைமை வலுவாக இருப்பது தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் காரணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் நடப்பு நிதி ஆண்டின் 9 மாதஙகளில் 7,764 புதிய திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.12,76,679 கோடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x