1,05,250 டிராக்டர்கள் விற்பனை சோனாலிகா சாதனை!

1,05,250 டிராக்டர்கள் விற்பனை சோனாலிகா சாதனை!
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி டிராக்டர் பிராண்டான சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம், 2021-ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து புதிய சாதனை புரிந்துள்ளது.

அத்துடன் சோனாலிகா நிறுவனம் 9 மாதங்களில் 25 ஆயிரத்துக்கும் மேலான டிராக்டர்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பெரும்பாலான நிறுவனங்கள் எட்ட முடியாத இந்த இலக்கை சோனாலிகா எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் 3,432 டிராக்டர்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 31.2 சதவீதம் அதிகமாகும். இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவன இலக்கை விட இந்த எண்ணிக்கை இரட்டிப்பானதாகும்.

2021-ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ஒட்டுமொத்தமாக சோனாலிகா 1,05,250 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நிலவிய நெருக்கடியான சூழலிலும் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப அதிநவீன தொழில்நுட்பத்திலான டிராக்டர்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளது சோனாலிகா.

அதிக விற்பனை குறித்து சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவன செயல் இயக்குநர் ரமன் மிட்டல் கூறியது: “9 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

விவசாயிகளுடன் நேரடியான அணுகுமுறையால் அவர்களது தேவையை உணர்ந்து தயாரிப்புகளை தொடர்ந்து நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதனை அளவாக 1,05,250 டிராக்டர்கள் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்-2021) விற்பனையாகியுள்ளன.

மேலும் ஏற்றுமதியில் எப்போதுமே முதலிடம் வகிக்கும் இந்திய பிராண்டாக திகழ்வதை பெருமையுடன் குறிப்பிட்டாக வேண்டும். 2021-22 நிதி ஆண்டில் 25,000 டிராக்டர்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் புதிய பயணத்தை 2022-ல் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் சரியான டிராக்டர்கள், மிக உயர் தரத்தில் மிகச் சிறப்பான குழுவினரால் தயாரிக்கப்பட்டு வேளாண் மக்கள் வளம் பெற வழி வகுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in