Published : 16 Jan 2022 12:05 PM
Last Updated : 16 Jan 2022 12:05 PM

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்

புதுடெல்லி: தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

ஸ்டார்ட்அப் திட்டம், தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவின் அடையாளம். சென்னையைச் சேர்ந்த மீனவரின் மகன் அல்லது காஷ்மீர் படகோட்டியின் மகளாக இருக்கட்டும், அனைவரும் தங்கள் குடும்பங்களுக்கும், மக்களுக்கும் வளம் சேர்க்க விரும்புகின்றனர். அதனால் நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் தொடக்க நிறுவனங்களின் பங்களிப்பை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கலாச்சாரத்தை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்ல, ஜனவரி 16ம் தேதியை, தேசிய ஸ்டார்-அப் தினமாக அறிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு, தொடக்க நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கும் ஆற்றல் உடையதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்புகிறார். இந்தியாவை தற்சார்பாக மாற்றுவதில் புத்தாக்கம் வலுவான தூணாக இருக்க வேண்டியதை அவர் அங்கீகரிக்கிறார்.

புத்தாக்கத்தை வலுப்படுத்த 3 அம்சங்களில் பிரதமர் கவனம் செலுத்துகிறார்.

அரசு நடைமுறை என்ற வலையிலிருந்து தொழில்முனைவோர்களை விடுவிப்பது - 25,000க்கும் மேற்பட்ட இணக்கங்கள் குறைக்கப்பட்டன. எளிதான சூழலில், தொழில் வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்ய முடியும்?

தொழில் முறை உருவாக்கம், - ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.

இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புதிய நிறுவனங்களை வழிநடத்துதல் - வழிகாட்டுதல் எதிர்காலத்தில் புதுமையை வரையறுக்கும்.

உலகில் உள்ள ஸ்டார்ட்அப் சூழலில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வர, 5 விஷயங்களில் தொடக்க நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

1. இந்திய மொழிகளில் தீர்வுகள் மற்றும் கருத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

2. மிகப் பெரிய அளவில் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.

3. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.

4.நகர்புற உள்ளாட்சி அளவில் புத்தாக்க மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும்.

5. உலகளாவிய சிறந்த முறைகளை பின்பற்றி, இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x