சாகர்மாலா திட்டத்தில் கப்பல், துறைமுகத் துறையில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சாகர்மாலா திட்டத்தில் கப்பல், துறைமுகத் துறையில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
Updated on
2 min read

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் சாகர் மாலா திட்டத்தின்கீழ் ஒரு கோடி பேருக்கு துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 7,500 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 14,500 கி.மீ. தூரத்துக்கு நீர் வழித் தடங்களை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. சாகர்மாலா என்றழைக் கப்படும் இத்திட்டத்தின் பயனாக ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உரு வாகும் என்று மத்திய தரைவழி, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சாகர்மாலா உயர் நிலை குழு கூட்டத்துக்கு தலைமை யேற்று பேசிய அவர் மேலும் கூறியதாவது: இந்தத் திட்டத்தின் மூலம் 40 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும். 60 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உருக்குத்துறை அமைச்சர் நரேந் திர சிங் தோமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மும்பையில் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்க உள்ள இந்திய கடல்சார் மாநாடு குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. மூன்று நாள் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூலம் ரூ. 2 லட்சம் கோடிக்கான முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடல்சார் துறையில் பொதிந் துள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகை யில் இந்த மாநாடு நடத்தப் படுகிறது. அதேசமயம் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டதுபோல துறைமுக வளர்ச்சி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை அரசு உணர்ந்து தமது துறை அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாக கட்கரி கூறினார்.

நாட்டில் உள்ள நீர் வழித் தடங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மொத்தம் உள்ள 116 நீர் ஆறுகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். நீர் வழிப் பாதைகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்குகளைக் கையாளுவதில் செலவு கணிசமாகக்குறையும் என்று குறிப்பிட்ட அமைச்சர் தற்போது தரை மார்க்கத்தில் எடுத்துச் செல்ல ரூ.1.50 ஆகும் செலவு நீர் வழித் தடம் மூலம் கையாளப்பட்டால் ஒரு கி.மீ. தூரத்துக்கு வெறும் 25 காசுகளாகக் குறையும் என்றார். 150 திட்டப் பணிகளை சாகர்மாலா திட்டத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

முதல் கட்டமாக 111 நீர் வழித் தடங்களை மேம்படுத்துவது மற்றும் சிறு மற்றும் பெரிய துறைமுகங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஹார்டா வாராணசி இடையிலான கங்கை ஆறு நீர் வழிப் பாதையை மேம் படுத்த ரூ.4 ஆயிரம் கோடி செல விடப்பட உள்ளதாகக் கூறினார்.

கடலோரப் பகுதிகளை மேம்படுத்துவதால் 13 மாநிலங்கள் பயன்பெறும். அத்துடன் லட்சக்கணக்கான மீனவர்களும் பயன்பெறுவர். அத்துடன் குறைந்த விலையிலான வீடுகளைக் கட்டித்தரும் திட்டமும் இதில் உள்ளதாக கட்கரி கூறினார்.

நெடுஞ்சாலை மேம்பாட்டுடன் துறைமுகம் மற்றும் கப்பல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்களிப்பு 2 சதவீத அளவுக்கு உள்ளது என்று கட்கரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in