2021-ம் ஆண்டு: ஜவுளி ஏற்றுமதி 41% அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2021 ஏப்ரல்-டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 41% அதிகரித்துள்ளது.

நிதியாண்டு 20-21-ல் பெருந்தொற்று காரணமாக தேவையும், விநியோகமும் பாதித்ததால் ஜவுளி ஏற்றுமதியில் வீழ்ச்சி இருந்தது.இருப்பினும் 2021-22-ல் மீட்சியின் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதால் 2021, ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி உட்பட ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மதிப்பு 29.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. சென்ற ஆண்டு இதே காலத்தில் இது 21.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 41% அதிகமாகும்.

இந்த வளர்ச்சி பொருளாதாரம் மீட்சி அடைந்திருப்பதன் அடையாளமாகும். இறக்குமதியை விட பலமடங்கு ஏற்றுமதி அதிகரிப்பதால் ஜவுளித்துறை தொடர்ந்து வர்த்தக உபரியைப் பராமரித்து வருகிறது.

கைவினைப் பொருட்கள் உள்பட ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு அரசு 44 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு நிர்ணயித்ததில் சுமார் 67 சதவீதம் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. நிதியாண்டின் இறுதிக்காலாண்டு எப்போதும் முந்தையக் காலாண்டுகளை விட அதிகபட்ச செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால் இலக்குகளை எட்டமுடியும் என்று தொழில்துறை நம்பிக்கையுடன் உள்ளது என ஜவுளித்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in