

நடப்பாண்டில் இ பைலிங் விரைவில் தொடங்கும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் டேக்ஸ் கால்குலேட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் வரி செலுத்துபவர் கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த வருடம் இ-பைலிங் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. ஐடிஆர் படிவத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்த வருடம் விரைவில் தொடங்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமீபத்திய பட்ஜெட்டை அடிப்படையாக கொண்டு டேக்ஸ் கால்குலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் என அனைவரும் இந்த கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
>www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் டேக்ஸ் கால்குலேட்டர் உள்ளது.