Published : 10 Jan 2022 12:41 PM
Last Updated : 10 Jan 2022 12:41 PM

நியூயார்க் நகரில் ரூ.729 கோடிக்கு சொகுசு ஹோட்டல் வாங்கும் முகேஷ்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் என்ற சொகுசு ஹோட்டலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாங்குகிறது.

அந்த ஹோட்டலின் 73.37%பங்குகளை 98.1 மில்லியன் டாலருக்கு (ரூ.729 கோடி) வாங்கரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மீதமுள்ள 26.63% பங்குகளையும் ரிலையன்ஸ் குழுமமே வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அதன் விருந்தோம்பல் வணிகத்தை விரிவுபடுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஹோட்டலை வாங்குவதாக கூறப்படுகிறது.

2003-ம் ஆண்டு கட்டப்பட்ட மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல் நியூயார்க்கின் முக்கியமான சொகுசு ஹோட்டலாக விளங்குகிறது. 2018-ல் இந்த ஹோட்டல் 115 மில்லியன் டாலர் வருவாயும், 2019-ல் 113 மில்லியன் டாலர் வருவாயும் ஈட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x