

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் பெயர் மாற்றத்துக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. என்எல்சி இந்தியா என்று மாற்றப்பட உள்ளது.
இந்த பொதுத்துறை நிறுவனம் கடந்த மாதம் விரிவாக்க பணிகளில் ஈடுபட முடிவெடுத்தது.
உற்பத்தி திறனை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்தது. அனல் மின் நிலையம் மற்றும் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவற்றிலும் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. தவிர நிலக்கரி சுரங்கங்களை கையகப்படுத்தும் திட்டங்களிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதனால் லிக்னைட் சார்ந்த பணியில் மட்டும் இந்த நிறுவனம் ஈடுபடவில்லை என்பதால் பெயர் மாற்றம் செய்ய நிறுவனம் முடிவெடுத்தது. அந்த மாற்றத்துக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் 19,000 மெகா வாட் மின் உற்பத்தியை அடைய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.