

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமான எம்பசிஸின் (Mphasis) பெரும்பான்மையான பங்குகளை அமெரிக்க பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் வாங்கி உள்ளது. எம்பசிஸ் நிறுவனத்தில் 60.5 சதவீத பங்குகளை ஹியூலெட் பக்கார்ட் நிறுவனம் வைத்துள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து 60.5 சதவீத பங்குகளை வாங்குகிறது. இதற்காக ரூ.5,644 கோடி முதல் 7,071 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய பிளாக்ஸ்டோன் திட்டமிட்டுள்ளது.
ஹெச்பி பங்குகளை வாங்க, டெக் மஹிந்திரா பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான அப்போலோ ஆகியவை கடந்த சில மாதங்களாகவே பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
எம்பசிஸ் நிறுவனத்தில் 16 நாடுகளில் 24,000 பணியா ளர்கள் பணிபுரிகிறார்கள். டிசம் பர் 31-ம் தேதியுடன் முடிவ டைந்த ஒரு வருட காலத்தில் 5,999 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் வருமானமாக இருக்கிறது.
பிளாக்ஸ்டோன் நிறுவனம் இந்தியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.91 சதவீதம் சரிந்து 454.70 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.