

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மொத்தமாக 50,866 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக ஜேஎம்கே ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 240 சதவீதம் அதிகமாகும்.
2021 டிசம்பர் மாதம் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 சக்கர பயணிகள் வாகனங்கள் 90 சதவீதம் அளவில் பங்கு வகிக்கின்றன. அதில் இருசக்கர வாகனங்களின் பங்கு 48.6 சதவீதமாக உள்ளது.
எலக்ட்ரிக் கார்களின் பங்கு 5 சதவீதமாகவும், கார்கோ பயன்பாட்டுக்கான மூன்று சக்கர வாகனங்களின் பங்கு 4.3 சதவீதமாகவும் உள்ளது.
டிசம்பர் மாதம் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் விற்பனை யான மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் உத்தர பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த விற்பனையில் 23% ஆகும். மொத்த விற்பனையில் மகாராஷ்டிரா 13%, கர்நாடகா 9%, ராஜஸ்தான் 8%, டெல்லி 7%, தமிழ்நாடு 7% என்ற அளவில் பங்கு வகிக்கின்றன.