

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவன (ஓ.எம்.சி.) பங்குகள் அதிகபட்சம் 6 சதவீதம் வரை உயர்ந்தன. பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்கு 5.67 சதவீதம் உயர்ந்து 862 ரூபாயில் முடிவடைந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்கு 3.28 சதவீதமும், இந்தியன் ஆயில் நிறுவன பங்கு 2.64 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது.
நேற்று பெட்ரோல் விலை லிட்ட ருக்கு 3.07 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.90 ரூபாயும் உயர்த் தப்பட்டது. மூன்று மாதங்களாக சரிந்துவந்த விலைகள் இப்போது உயரத் தொடங்கி இருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும் 16 தேதியும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.
நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தையை பொறுத்தவரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிந்து 24677 புள்ளியிலும், நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7512 புள்ளியிலும் முடிவடைந்தன.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை எதிர்பார்த்ததை விட குறைந்த முறையே வட்டி விகிதத்தை உயர்த்தும். முன்பு திட்டமிடப்பட்டிருந்த 4 முறைக்கு பதிலாக 2 முறை மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைக்கு அதிக முதலீடுகள் வந்தன. ஆயில் அண்ட் கேஸ் குறியீடு அதிகபட்சமாக 2 சதவீதம் உயர்ந்தது.
இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 54 பைசா உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.69 ரூபாயாக இருந்தது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.07 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதால் மூன்று மாதங்களாக சரிந்துவந்த விலைகள் இப்போது உயரத் தொடங்கி இருக்கின்றன.