Published : 04 Jan 2022 04:25 PM
Last Updated : 04 Jan 2022 04:25 PM

டிசம்பரில் விற்பனையான டாப் 10 கார்கள் எவை?- ஹூண்டாயை பின்னுக்கு தள்ளிய டாடா

டாடா நெக்ஸான் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான சப்-காம்பாக்ட் எஸ்யூவியாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் 8 மாருதி மாடல்களைத் தவிர ஹூண்டாய் வென்யூ மட்டுமே இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கார்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய சப்ளை செயின் சிக்கல்களால் ஒட்டுமொத்த தொழில்துறையும் சிக்கிக்கொண்டுள்ளது. இருப்பினும் இந்த கார்களில் மாருதி சுசுகியின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், மாருதி முன்னணி கார் தயாரிப்பாளராக உருவெடுத்தது.
அதைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹூண்டாய் மோட்டாரை இரண்டாம் இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது.

மாருதியின் ஆதிக்கம் தொடர்வதற்கு அதிக விற்பனையாகும் கார்களில் பெரும்பாலானவை அதன் வழக்கமான கார்களாக உள்ளன.

கடந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் எட்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், பட்டியலில் டாடா நெக்ஸானின் உயர்வு மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டிசம்பரில் விற்பனையான டாப் 10 கார்களை பார்க்கலாம்:

மாருதி வேகன்ஆர்

மாருதியின் வேகன்ஆர் அதன் புதிய தலைமுறையில் அனைத்து சிப் நெருக்கடி சிக்கல்கள் இருந்தபோதிலும் இதன் வேகம் குறையவில்லை. மாருதி கடந்த மாதம் 19,729 வேகன்ஆர் கார்களை விற்றது, இது 2020 டிசம்பரில் 17,684 யூனிட்கள் விற்றது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது மாருதி 16,853 யூனிட்களை விற்றுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 2020 உடன் ஒப்பிடும்போது விற்பனை குறைந்துள்ளது. கடந்த மாதம், மாருதி 15,661 யூனிட் ஸ்விஃப்ட்டை விற்றது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 18,131 யூனிட்களை விற்றது. மாருதி 14,568 ஸ்விஃப்ட் கார்களை விற்ற நவம்பரை விட டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

மாருதி பெலேனோ

பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பெலேனோவின் பேஸ்லிஃப்ட் பதிப்பில் மாருதி விரைவில் களமிறங்க உள்ளது. இருப்பினும், தற்போதைய மாடல் கார் விற்பனை கூடுதல் வருமானத்தை தொடர்ந்து அளித்துள்ளது. கடந்த மாதம், மாருதி 14,458 பெலேனோ கார்களை விற்பனை செய்தது, முந்தைய மாதத்தில் 9,931 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. பெலேனோவின் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிசம்பர் 2020 இல், மாருதி பிரீமியம் ஹேட்ச்பேக் 18,030 யூனிட்களை விற்றது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸான்

ஹூண்டாய் மோட்டாரை விட இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக டாடா மோட்டார் உயர்ந்துள்ளது. இது கார் தொழில்துறையின் மிகப்பெரிய பேசும் பொருளாகியுள்ளது. கடந்த மாதம் டாடாவின் வெற்றியின் பெரும்பகுதி அதன் எஸ்யூவி நெக்ஸான் காரணமாகும்.
டாடா டிசம்பரில் 12,899 நெக்ஸான் யூனிட்களை விற்றது.

இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். நெக்ஸான் விற்பனை செயல்திறன் எஸ்யூவி பட்டியலில் நான்காவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. டாடா நவம்பரில் 9,831 நெக்ஸான் யூனிட்களை விற்றது, 2020 டிசம்பரில் வெறும் 6,835 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி எர்டிகா

மாருதியின் மூன்று-வரிசை எர்டிகா வலுவான செயல்திறன் கொண்டதாகத் தொடர்கிறது. மாருதி கடந்த மாதம் 11,840 எர்டிகா கார்களை விற்றது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 9,177 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது, மாருதி நிறுவனம் 8,752 எர்டிகா கார்களை விற்பனை செய்ததை விட இது அதிகம்.

மாருதி ஆல்டோ

மாருதியின் மிகப் பழமையான மாடலான ஆல்டோ, டிசம்பரில் சற்று கீழே இறங்கியுள்ளது. கடந்த மாதம் 11,170 யூனிட்கள் விற்பனையாகி, இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோ ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 18,140 மாருதியுடன் ஒப்பிடும்போது ஆல்டோவின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட மாருதியின் விற்பனை 13,812க்கும் குறைவாகவே உள்ளது.

மாருதி டிசையர்

பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே சப் காம்பாக்ட் டிசையர் மட்டுமே. முந்தைய ஆண்டு புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தாலும், இந்த பிரிவில் டிசைரின் செயல்திறன் முக்கியமானது. மாருதி கடந்த மாதம் 10,633 டிசையர்களை விற்றது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 13,868 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய் விற்பனையில் சரிவு தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், ஹூண்டாயின் ஒரே ஆறுதல் மாருதியின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸாவை முறியடிப்பதாக உள்ளது. அது ஒரு சில இடங்கள் முன்னேறி பட்டியலில் 8-வது இடத்திற்கு வந்துள்ளது. ஹூண்டாய் கடந்த மாதம் 10,360 யூனிட் விற்றது. இது 2020 டிசம்பரில் 12,313 யூனிட்களாக இருந்தது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதியின் எஸ்யூவி பிரெஸ்ஸா கடந்த மாதம் 9,531 யூனிட்கள் விற்பனையாகி இந்திய வாங்குபவர்களிடையே தொடர்ந்து வலுவான விருப்பமாக உள்ளது. டிசம்பர் 2020 இல், மாருதி எஸ்யூவியின் 12,251 யூனிட்களை விற்றது, முந்தைய மாதத்தில் 10,760 யூனிட்களை விற்றது.

மாருதி ஈகோ

மாருதியின் பயன்பாட்டு பயணிகள் வேன் ஈகோ இந்தியாவில் விற்பனையாகும் முதல் 10 கார்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளத. 2020 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 11,215 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஈகோ 9,165 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்தில், மாருதி 9,571 யூனிட் வேன்களை விற்பனை செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x