

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வங்கியிட மிருந்து 55 கோடி டாலர் (சுமார் ரூ. 3,500 கோடி) நிதியை கடனாக திரட்டியுள்ளது.
இதன் மூலம் பெட்ரோ கெமிக்கல் ஆலையை விரிவுபடுத் தவும், புதிய எரிவாயு பிரிவைத் தொடங்கவும் பயன்படுத்திக் கொள்ளும்.
வெளிநாடுகளிலிருந்து நிதியைக் கடனாகப் பெறும் முயற்சியை ரிலையன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டிலிருந்து தொடங்கி தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது.
இதற்காக ஏற்றுமதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்துடன் (இசிஏ) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஜப்பானிய வங்கிகளின் கூட்டமைப்பான ஜேபிஐசி-யிடமிருந்து நிதி கடனாக பெறப்பட்டுள்ளது. இந்த கடன் வசதி 12 ஆண்டுகளுக்கானது.