

நாட்டிலுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்) மூலமான ஏற்றுமதி 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 1.89 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மக்களவையில் நேற்று எழுத்து மூலமாக இதனைத் தெரிவித்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-15-ம் நிதி ஆண்டில் இந்த மண்டலங்களின் மூலமான ஏற்றுமதி 6.13 சதவீதமாக இருந்தது. மொத்தம் ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பு ரூ.4.63 லட்சம் கோடியாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு தேவைப் படும்போது உரிய சலுகைகளும் வழங்குகிறது.
சிறப்புப் பொருளாதார மண்ட லங்களை ஊக்குவிக்கும் வகையில் 132 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துமாறு உரிய நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப் பிட்ட அவர், அனுமதி குறித்த விவரங் களை வர்த்தகத்துறைச் செயலர் கவனித்துக் கொள்வதாகக் கூறினார்.
குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி), ஈவுத்தொகை மீதான வரி விதிப்புகள் ஏற்றுமதியைப் பாதிப்பதாக தொடர்ந்து எஸ்இ இஸட் உருவாக்கும் நிறுவனங்கள் சுட்டிக் காட்டி வருகின்றன.
மத்திய உணவு தொகுப்புக்காக 2008-09-ம் ஆண்டில் கோதுமை, அரிசி உள்ளிட்டவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வில்லை என்று பிரிதொரு கேள்விக்கு பதிலளிக்கையில் நிர்மலா கூறினார்.
உலக வர்த்தக அமைப்புடனான (டபிள்யூடிஓ) பொதுத் தொகுப்பில் தானிய கையிருப்பு வைப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு, ஜெனீவா கூட்டத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் கூறிப்பிட் டார். நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 12.7 சதவீதம் சரிந்து விட்டதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டின் (2015-16) முதல் 10 மாதங்களில் இந்தியாவிலிருந்து 29.95 லட்சம் டன் சர்க்கை ஏற்றுமதி செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறி னார். முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் 19.55 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதை யும் அவர் சுட்டிக் காட்டினார்.