ஐடிபிஐ பங்குகளை விற்க அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு: நிதி அமைச்சரிடம் மனு அளிப்பு

ஐடிபிஐ பங்குகளை விற்க அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு: நிதி அமைச்சரிடம் மனு அளிப்பு
Updated on
1 min read

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்குள்ள பங்குகளை விற்ப தற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாங் கள் எதிர்ப்பதற்கான காரணத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து இக்கூட்ட மைப்பின் நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர்.

டெல்லியில் நேற்று முன் தினம் மத்திய அமைச்சரை வங்கி கூட்டமைப்பின் செயலர் .எஸ். ராம் பாபு, துணைத் தலைவர்கள் ஜே.எஸ். சர்மா, என். வேணு கோபால், இணைச் செயலர் டி.டி. ரஸ்தோகி ஆகியோர் சந்தித்து ஐடிபிஐ பங்குகளை விற்பனை செய்வதற்கு கூட்டமைப்ப எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை விளக்கினர். இத்தகவலை கூட்ட மைப்பின் பொதுச் செயலர் சி.ஹெச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஐடிபிஐ வங்கி மிக அதிக அளவிலான வாராக் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இவ்விதம் வாராக் கடன் சுமை அதிகரித்ததற்கு விசாரணை நடத்தவேண்டும் என்று கூட்டமைப்பின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அத்துடன் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்துள்ள பிற வங்கிகள் எதிர்கொண்டுள்ள பிரச் சினைகள் குறித்து விரிவான அறிக்கையை நிதி அமைச்சரிடம் நிர்வாகிகள் அளித்ததாக வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

எஸ்பிஐ-யுடன் இணைந்த அசோசியேடட் வங்கிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடன் வசூல் தீர்வுகளில் விதி மீறல் ஆகியன குறித்து நிதி அமைச்சரிடம் விளக்கமாக எடுத்துரைத்ததாகவும், எஸ்பிஐ பிடியிலிருந்து இந்த வங்கி களை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிய தாக வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்கி நிர்வாகிகள் அளித்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சர் உறுதி அளித்ததாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in