Published : 30 Dec 2021 04:48 PM
Last Updated : 30 Dec 2021 04:48 PM

இ-நாமினேஷன் கடைசி தேதி நீட்டிப்பு:  இபிஎப்ஓ அறிவிப்பு

புதுடெல்லி: இ-நாமினேஷன் செய்வதற்கான கடைசி தேதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது.

இபிஎப்ஓ விதிகளின்படி இ-நாமினேஷனை தாக்கல் செய்வது கட்டாயமாகும். ஏனெனில் இது வருங்கால வைப்பு நிதி , ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் பலன்களை எளிதாக உறுப்பினரின் மரணத்திற்கு பின்பு வாரிசுதாரர்கள் ஆன்லைன் மூலம் உரிமைகோரல்களை தாக்கல் செய்து பெற உதவுகிறது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கணக்கு வைத்திருப்பவர்களை இ-நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகும் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையதளத்திலேயே ‘மின்-நாமினேஷன்’ வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும்.

முன்னதாக இதற்கு கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது இருந்தது. இபிஎப்ஓ இணையளத்தில் பயனாளிகள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் வாரிசுதாரர் விவரங்களைப் புதுப்பிக்க முயற்சித்ததால் போர்டல் செயலிழந்ததாகத் தெரிவித்தனர்.

ஆன்லைனில் நாமினியை எவ்வாறு சேர்ப்பது:

இபிஎப்ஓ இணையதளத்தில் சேவைகள், ஊழியர்களுக்கான ‘‘உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை’’ என்பதைக் கிளிக் செய்து நாமினியை சேர்க்கலாம்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x