

ரியல் எஸ்டேட் தொழிலில் திட்ட செலவில் 50 சதவீதம் வரை இந்தியாவில் நிறுவனங்கள் லஞ்ச மாக அளிக்கின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது. திட்டங்களுக்கான அனுமதியை விரைவாக வாங்க வேண்டுமெனில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று உலக பொருளாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு, சீர்திருத்தங்களின் மீதான எதிர்பார்ப்பு, கட்டமைப்பு மேம் பாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தி வருகிறது. சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், வளர்ச்சியை தாமதப்படுத்தும் நடவடிக்கையாக லஞ்சம் உள்ளது.
லஞ்சத்துக்கு எதிரான நடவடிக் கையாக `வெளிப்படையான அடித் தளக் கட்டமைப்பு’ என்கிற அறிக் கையில் இதை கூறியுள்ளது. உலக பொருளாதார அமைப்பு கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தி ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது மிக மோசமாக பாதித்துள்ளது என்று குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கைக்காக இந்தியா வில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கருத்து கேட்கப் பட்டது. இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதர தொழில் துறையினரை விட உள் கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளன. இதர ஆசிய நாடு களில் நிலவுவதைவிட இந்தியா வில் அதிகமாக லஞ்ச விவகாரம் உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுக்காக ஒழுங்கு முறை விதிகள், கட்டுமான அனுமதி, நிலம் கையகப்படுத்தல், மஹாராஷ்டிராவில் பத்திர பதிவு உள்ளிட்டவற்றில் பொருளா தார அமைப்பு கவனம் செலுத்தி யுள்ளது. இந்திய பொருளா தாரத்தில் அதிகபட்சமான பங்கு விகிதமாக 22 சதவீதத்தை 2014-15 ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் கொண்டிருந்தன என்றும் அறிக்கை கூறியுள்ளது.
லஞ்சத்துக்கு எதிராக ஒழுங்கு முறை சட்டங்கள் மிகப்பெரிய அழுத்தத்தை தர வேண்டும் என்று துறை சார்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஆய்வு மேலும் குறிப்பிட்டுள்ளது.