Published : 03 Mar 2016 09:30 AM
Last Updated : 03 Mar 2016 09:30 AM

ஜிடிபி 7.8 சதவீதமாக உயரும்: நொமுரா ஆய்வில் தகவல்

இந்தியாவின் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 2016-17 நிதியாண்டில் 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள் ளது. ஜப்பானைச் சேர்ந்த முக்கிய பொருளாதார ஆலோ சனை நிறுவனமான நொமுரா, இந்தியாவின் பல்வேறு பொரு ளாதார புள்ளிவிவரங்கள் அடிப் படையில் இந்த ஆய்வை வெளி யிட்டுள்ளது. 2016-ம் நிதியாண்டில் 7.6 சதவீதமாக உள்ள இந்திய ஜிடிபி 2017 நிதியாண்டில் 7.8 சதவீத மாக உயரும் என்று கூறியுள்ளது.

அதிகரித்து வரும் தேவை களுக்கு ஏற்ப இந்தியா வளர்ந்து வருவதால் ஜிடிபி அதிகரிக் கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக சம்பள கமிஷன் அறிக்கைபடி அதிகரிக்கும் சம்பளத்தால் தேவை கள் அதிகரிப்பது, குறை வான பணவீக்க விகிதம், நிறுவனங் களின் லாப உயர்வு, பொருளா தார கொள்கைகளில் இணக்க மான சூழல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக் கைகள் தொடர்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப் படையில் இந்தியாவின் ஜிடிபி அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

நடப்பு பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்ததன் மூலம் வளர்ச்சி எளிதாகியுள்ளது என்று அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் தற்போது ரிசர்வ் வங்கி தனது நிலையிலிருந்து இறங்கி வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விதமாக ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்திலிருந்து 25 சதவீத வட்டி குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை கூறி யுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x