இயக்குநர் குழுவில் பெண்கள் இடம் பெற்றிருந்தால் அதிக மதிப்பு: ஆய்வில் தகவல்

இயக்குநர் குழுவில் பெண்கள் இடம் பெற்றிருந்தால் அதிக மதிப்பு: ஆய்வில் தகவல்
Updated on
1 min read

நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்கள் இடம் பெற்றி ருந்தால் அத்தகைய நிறுவனங் களுக்கு பங்குச் சந்தையில் மிகுந்த மதிப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாலின பேதம் இல்லாமல் உயர் பதவிகளில் பெண்கள் முன்னேறியுள்ள இயக்குநர் குழுவுக்கு பெரும் வரவேற்பு உள்ளதாக மூனிச் பல்கலைக் கழக பொருளாதார அறிஞர்கள் மற்றும் ஹாங்காங் பல்கலைக் கழகத்தின் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்து முதுமை காரணமாக அல்லது இறப்பு காரணமாக உருவாகும் அந்த இடத்துக்கு வரும் பெண் களின் நிர்வாகத்தில் செயல்படும் நிறுவனங்கள் குறித்து 51 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 3 ஆயிரம் நிறுவனங் கள் இந்த ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டன. 1998-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையான காலம் இதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைமைப் பொறுப்பிலுள்ள பெண் இயக்குநர் திடீரென இறந்துவிட்டால் அந்நிறுவனங் களின் பங்கு விலை சராசரியாக 2 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதேசமயம் பெண்களுக்குப் பதிலாக அப்பொறுப்புக்கு ஆண் கள் நியமிக்கப்பட்டால் பங்கு விலை சராசரியாக 3 சதவீதம் சரிந்தது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ஆண் இயக்குநர் உள்ள நிறுவனங் களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் திடீரென வெளியேறி னால் அது பங்குச் சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. திறமையால் உயர் பதவிக்கு வரும் பெண்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங் களுக்கு மிகுந்த மதிப்பிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிறுவனங்களின் உயர் பொறுப் பில் பெண்கள் இடம்பெறுவது ஜப்பானில் 3 சதவீதமாகவும், அமெரிக்காவில் 8 சதவீதமாகவும், பிலிப்பைன்ஸில் 20 சதவீதமாகவும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in