

செங்கல்பட்டு: காஞ்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் உட்பட 52 கிளைகள் மற்றும் 264 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வசதிக் கடன், வீடு அடமானக் கடன், தனி நபர் நகைக் கடன், பணி புரியும் மகளிர் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்களாக சிறு பால் பண்ணை அமைக்க கடன் வழங்கப்படுகிறது.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கியின் தலைமையகம் மற்றும் மத்திய வங்கி கிளைகளில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு கடன் மேளா நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டிகளில் கடனுதவி பெற்றுபயனடையலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.