

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கு வெளியீட்டை (ஐபிஒ) இன்பிபீம் நிறுவனம் வரும் மார்ச் 21-ம் தேதி வெளியிடுகிறது. இந்த நிலையில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடலாம் என்று ஊகங்கள் எழுந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின் றார்கள். பெரும்பாலான இ-கா மர்ஸ் நிறுவனங்கள் இன்னும் லாபத்தை அடையவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிட பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கியது. இந்த ஐபிஓ மூலம் 450 கோடி ரூபாயை இந்த நிறுவனம் திரட்டுகிறது.
ஒரு பங்கு விலை 360 முதல் 432 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. 21-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு விண் ணப்பிக்கலாம். ஏப்ரல் 4-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகும் என்று தெரிகிறது.
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான விஷால் மேத்தா இந்த நிறுவனத்தை 2007-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம் வாடிக்கையாளர் களை விட நிறுவனங்கள் (பி2பி) மீது கவனம் செலுத்தியது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதத்தில் இந்த நிறுவனம் 171.27 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இதே காலத்தில் 15 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. கடந்த 2014-15-ம் ஆண்டில் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது.