Published : 24 Dec 2021 03:12 PM
Last Updated : 24 Dec 2021 03:12 PM

டைகர் டி.ஐ. 75 ரக டிராக்டர் சோனாலிகா அறிமுகம்

சென்னை

சென்னை: சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் மிகவும் மேம்பட்ட டைகர் டி.ஐ. 75 (Tiger DI 75) (4 சக்கர சுழற்சி) டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்பட்ட சி.ஆர்.டி. தொழில்நுட்பம் உள்ளது. இது ரூ.11 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரையான விலையில் கிடைக்கும்.

டிராக்டர் துறையில் முதல் முறையாக அதிக திறன், அதேசமயம் எரிபொருள் சிக்கனம் என இரட்டைப் பலன் தரும் வகையில் இது அறிமுகமாகியுள்ளது. டைகர் 75 டிராக்டரில் பயன்படுத்தபட்டுள்ள சி.ஆர்.டி. நுட்பமானது டிரெம்-IV (Trem IV) புகை விதிக்குட்பட்டது. இது 75 ஹெச்.பி. திறனையும், 65 ஹெச்.பி. திறன் கொண்ட டிராக்டர் நுகரும் எரிபொருளையும் பயன்படுத்தும்.

இத்துடன் சோனாலிகா நிறுவனம் டைகர் டி.ஐ. 65 4.டபிள்யூ.டி. டிராக்டரையும் அறிமுகம் செய்துள்ளது. இது 65 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும், 55 ஹெச்.பி. திறனுக்கான எரிபொருளை நுகரும். அத்துடன் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க புகைவிதி சோதனைகளுக்குட்பட்டதாக 2016ஆம் ஆண்டிலிருந்தே சோனாலிகா, தமது டிராக்டர்களைத் தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் டைகர் சீரிஸ் டிராக்டர்கள் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமான 2019-ம் ஆண்டிலிருந்தே விவசாயிகளின் அபிமானம் பெற்றதாகத் திகழ்கிறது. இரண்டு மாடலுமே 4 சக்கர மற்றும் 2 சக்கர சுழற்சியுடன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டதாகவும் 12+12 ஷட்டில் டெக் டிரான்ஸ்மிஷன் (12+12 shuttle tech transmission) 5 ஜி ஹைட்ராலிக் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டதாகவும் உள்ளது.

டைகர் டி.ஐ. 75 மற்றும் டைகர் டி.ஐ. 65 மாடல் டிராக்டர்கள் இரண்டிலுமே ‘ஸ்கை ஸ்மார்ட்’ டெலிமேடிக்ஸ் (‘Sky Smart’ Telematics) - பிரத்யேக சிறப்பம்சங்களான இன்ஜின் இம்மொபிலைஸர் (engine immobilizer), நிகழ் நேர உறுதுணை அம்சங்களைக் கொண்டது. இதனால் இன்ஜின் நின்றுபோனால் அது மீண்டும் செயல்படுத்துவதற்கான கால நேரம் மிகக் குறைவாக இருக்கும். வெகிக்கிள் ஜியோ-பென்சிங் மற்றும் டிராக்கிங் முறை மற்றவற்றில் உள்ளதைப் போல இதிலும் உள்ளது. விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் சோனாலிகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு நிபுணர்கள் புதிதாக சி.ஆர்.டி. நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது 10 சதவீதம் எரிபொருள் சிக்கனமானது. .

விவசாயிகள் நலனில் நிறுவனத்துக்கு உள்ள பொறுப்புணர்வு குறித்து குறிப்பிட்ட சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவன செயல் இயக்குநர் ரமன் மிட்டல், “நமது விவசாயிகளின் ஒவ்வொரு நாள் செயல்பாடும் மதிப்புமிக்கது, விவசாயிகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக சோனாலிகா நிறுவனம் மிகவும் மேம்பட்ட டைகர் டி.ஐ. 75 (4 சக்கர சுழற்சி) டிராக்டர் மற்றும் திறன் மிக்க எரிபொருள் சிக்கனமான சி.ஆர்.டி. எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டதாக வந்துள்ளது. இது அதிக திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் என்ற இருவகை பலனைத் தரும். விவசாயிகள் நலன் கருதி விவசாயத்தை கட்டுப்படியாகும் செலவில் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே சோனாலிகா நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்கிறது.

விவசாயிகளின் கடின உழைப்பையும், வேளாண் பணிகளில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டையும் கவுரவிக்கும் வகையில் இவ்விரு டிராக்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் சி.ஆர்.டி. தொழில்நுட்பத்தை டிராக்டர்களில் அறிமுகப்படுத்திய முதலாவது நிறுவனமாக சோனாலிகா திகழ்கிறது. அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புகைவிதி கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாக இவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விவசாயிகளின் தேவைக்கேற்ப நவீன தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்வதை நோக்கமாக எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.

இரண்டு புதிய டிராக்டர்களும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் உருவாக்கும் விகையில் சோனாலிகாவின் ஹெவி டியூட்டி டிராக்டர்கள் விளங்குவதோடு வேளாண் வளர்ச்சிக்கும் வித்திடும்'’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x