

சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 2016-ல் 7.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மார்கன் ஸ்டேன்லி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதம் என்கிற எதிர்பார்ப்பு 7.5 சதவீதமாக இருக்கும் என்று திருத்தி அமைத் துள்ளது. இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சியில் சில வெளிப்புற காரணிகளை சரி செய்ய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளது.
உள்நாட்டு பேரியல் பொருளா தாரம் கடந்த இரண்டு ஆண்டு களாக படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ள இந்நிறுவனம், ஆனால் சில வெளிப் புற காரணங்களால் வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட வகை யில் இல்லை என்று கூறியுள்ளது.
இதன் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சி 2016 ம் ஆண்டு 7.9 சதவீதமாக இருக்கும் என்கிற எங்களது எதிர்பார்ப்பை 7.5 சதவீதமாக இருக்கும் என்று மாற்றியமைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 2017 ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை 7.7 சதவீதமாகவும் மாற்றியமைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
சில உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மெல்ல நடைபெற்றுக் கொண்டு இருப் பதையும் அறிக்கை குறிப்பிட்டுள் ளது. குறிப்பாக உள்நாட்டு நுகர்வு மற்றும் பொதுமக்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டு வரும் மாற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் அந்நிய முதலீடு அதிகரித்து வருவது உள்நாட்டு வாங்கும் சக்தியை ஊக்குவிக்கும். வெளிப் புற தேவைகளின் நிலைமை கார ணமாக எதிர்பார்க்கப்பட்டதைவிட பொருளாதார வளர்ச்சி குறைகிறது என்று கூறியுள்ளது.
இதற்கிடையே சரக்கு ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு கடந்த 14 மாதங் களாக குறைந்துள்ளது. சேவைத் துறை ஏற்றுமதி மதிப்பும் கணிசமாக சரிந்துள்ளது. 2014ல் 5.1 சதவீதமாக இருந்த சேவைத் துறை ஏற்றுமதி மதிப்பு 2015ல் 0.4சதவீதமாக உள்ளது.
இந்திய பொருளாதார கண் காணிப்பு மத்திய அமைப்பின் சீர்திருத்தங்களால் தனியார் துறையின் திட்டங்கள் அதிகரித்துள் ளது. வெளிப்புற தேவைகளின் குறைவு தனியார் துறையின் வளர்ச்சிக்கு பலவீனமாக உள்ளது. நுகர்வு அளவு குறைவாக இருப் பது மற்றும் உற்பத்தி பொருட்களின் விலைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இது இந்திய நிறுவனங்களின் லாபத்தில் எதிரொலிக்கும் என்று மார்கன் ஸ்டேன்லி ஆலோசனை வழங்கியுள்ளது.