

எட்டு மாதங்களுக்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எஸ்யூவி ரக காரான கிரெடாவை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த வாகனத்துக்காக காத்திருப்பவர் களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இந்த கார் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவே உற் பத்தியை உயர்த்த திட்டமிட்டிருக் கிறோம். 30 சதவீத உற்பத்தியை உயர்த்தி ஒரு மாதத்துக்கு 13,000 வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதில் 10,000 கார்கள் உள்நாட்டு தேவைக்கு பயன்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்கே கூ (YK Koo) தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் இந்த புதிய மாடல் அறிமுகப் படுத்தப்பட்டது. இதுவரை 5 லட்சத் துக்கும் மேலான விசாரணைகள் வந்துள்ளன. 56,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்று வடிவங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு கொடுத்த வரவேற் புக்கு நான் நன்றியை தெரிவித் துக்கொள்கிறேன் என்றார். உள் நாட்டில் ஒரு லட்சம் முன்பதிவும், வெளிநாடுகளில் 28,000 கார் களுக்கு முன்பதிவும் செய்யப் பட்டிருக்கிறது.