

மத்திய அரசு விரைவில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை தொடங்க உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே பயன்பாட்டி லிருக்கும் 1,500 க்கும் மேற்பட்ட பாலங்கள் நாடு முழுவதும் உள்ளது. இந்த பாலங்களை புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படை யில் மீண்டும் கட்ட ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசின் சேது பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 10,200 கோடி ரூபாய் மதிப்பிலான 208 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் நவீனமான சர்வதேச தரத்தில் பிரீ-காஸ்ட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்படும். இதற்கு ஏற்ப 25 பிரீ காஸ்ட் தொழில் மண்டலங்கள் அமைக்கப்பட்டு கட்டுமான வேலைகள் நடைபெறும். இதன் மூலம் செலவுகளில் 30 சதவீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்
மேலும் இந்த பிரீ காஸ்ட் தொழில் நுட்பத்தை மெட்ரோ பணிகளின் பயன்படுத்தவும், மாநில அளவில் குறைந்த விலை வீடுகளைக் கட்ட பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் கட்கரி குறிப்பிட்டார்.