விரிவாக்கப் பணியில் ஐசிஎல்

விரிவாக்கப் பணியில் ஐசிஎல்
Updated on
1 min read

திருச்சூரைத் தலைமை இடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத நிறுவனமான ஐசிஎல் தமிழகத்தில் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது. தங்க நகைக்கடன், தொழில்கடன், வாகன கடன், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 24 கிளைகள் உள்ளன. நடப்பு அடுத்த நிதி ஆண்டு முடிவில் கிளைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனில்குமார் தெரிவித்தார். தற்போது சென்னையில் ஐந்து கிளைகள் உள்ளன. வரும் நிதி ஆண்டில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய இடங்களில் கிளைகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

1991-ம் ஆண்டு ஜவகர் பைனான்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2003-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை அனில் குமார் கையகப்படுத்தி ஐசிஎல் என்று பெயர் மாற்றம் செய்திருக் கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in