மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த ஜேட்லி முடிவு

மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த ஜேட்லி முடிவு
Updated on
1 min read

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டுக்கு முன்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளார். இந்த கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) டெல்லியில் நடைபெற உள்ளது.

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு குறித்து மாநில நிதி அமைச்சர்களின் கருத்துகளை கேட்டறிய திட்டமிட்டுள்ளார் ஜேட்லி. பட்ஜெட்டுக்கு முன்பாக அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார் ஜேட்லி. வியாழக்கிழமை விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்துறை பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

வெள்ளிக்கிழமை காலை பல்வேறு யூனியன் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். திங்கள்கிழமை அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக் கையில், சரக்கு சேவை வரியை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில அரசுகளின் கருத்துகள் கேட்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி ஒருமித்த வளர்ச்சியை எட்ட பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி மாநில நிதி அமைச்சர்களை பட்ஜெட்டுக்கு முன்பாக சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளார் ஜேட்லி.

சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டால் மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி, சேவை வரி ஆகிய அனைத்தும் ரத்தாகும். இதனால் மாநிலங்களின் வருவாய் குறையும். இதைக் கருத்தில் கொண்டே மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2011-ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜிஎஸ்டி அமலாக் கத்துக்கான மசோதாவை மக்கள வையில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in