Published : 25 Mar 2016 09:59 AM
Last Updated : 25 Mar 2016 09:59 AM

இவரைத் தெரியுமா?- நளின் மேத்தா

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2013-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டிலிருந்து மஹிந்திரா நேவிஸ்டர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக ஒன்பது வருடங்கள் பணியாற்றியவர்.

அட்லஸ் காப்கோ இந்தியா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

மார்க்கெட்டிங் துறையில் 35 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவர்.

2001-ம் ஆண்டில் மஹிந்திர அண்ட் மஹிந்திரா நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவிற்கு பொது மேலாளராக பணிக்குச் சேர்ந்தவர். மஹிந்திரா ரெனால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் இருந்துள்ளார்.

காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பி.டெக் பட்டமும் டெல்லி பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x