

கரூரைத் தலைமையிடமாகக் கொண்ட லக்ஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) வேளாண்மை உள்கட்டமைப்பில் முக்கியமான பங்களிப்பு செய்யும் நேஷனல் பல்க் ஹாண்ட்லிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (என்பிஹெச்சி) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட என்பிஹெச்சி நிறுவனம் சொத்து உத்தரவாதக் கடன் நிர்வாகம், பயிர் சேமிப்பு அறை சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
வேளாண் வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவியை அனைத்து நிலைகளிலும் வழங்கு வதே என்பிஹெச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அறுவ டைக்கு முன்பிருந்து உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வரை இந்த நிதியுத வியை இந்நிறுவனம் செய்துவரு கிறது. இதன் மூலம் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ற வகையில் நிதி உதவியைச் செய்ய லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு உதவமுடியும்.
இதற்கான ஒப்பந்தத்தை என்பிஹெச்சி நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி அனில் கே.சவுத்ரி மற்றும் எல்விபி சிஇஓ பி.முகர்ஜி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.