

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஜெய்ப் பூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைக்கும் ஏற்ப எதிர்கால மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சென்டர் ஆப் இன்னொவேஷன் அண்ட் டெக்னாலஜி (CIT) என இந்த மையத்துக்கு பெயரிடப்பட் டுள்ளது. 250 ஏக்கரில் ரூ.850 கோடி முதலீடு செய்துள்ளது.
இந்த மையத்தை தொடங்கி வைத்து நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் பேசியதாவது.
விற்பனையில் மட்டுமல்லாமல், உலக அளவில் அனைத்து அம்சங் களிலும் முதல் நிறுவனமாக உரு வாக்குவதே எனது கனவு என்று குறிப்பிட்டார்.
இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் உலக அளவி லான சந்தைக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களை மேம்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் நிறுவனம் 12 நிபுணர்கள் உள்பட 500 பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்குள் மேலும் 100 நபர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
ஜெய்பூரில் இருக்கும் இந்த மையத்தில் 16 கிலோ மீட்டர் பரப்பளவில் 14 சோதனை மையங்கள் உள்ளன.
டிவிடெண்ட் ரூ.40
இதற்கிடையே நேற்று நடை பெற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் இடைக்கால டிவிடெண்ட் அளிக்க அனுமதி அறிவித்துள்ளது. ஒரு பங்கு ஒன்றிற்கு ரூ.40 டிவிடெண்ட் அளிக்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் விற்பனை 13.6 சதவீதம் அதிகரித்து 5,50,990 ஆக உள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் நிறுவனம் அறிவித் திருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4,48,769 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.