விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக 7 யோசனைகள்: பிரதமர் மோடி

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக 7 யோசனைகள்: பிரதமர் மோடி
Updated on
1 min read

விவசாயிகள் வருமானம் இரட்டிப் பாக வளர பிரதமர் நரேந்திர மோடி 7 யோசனைகளை வெளியிட்டுள் ளார். இதற்கு ஏற்ப பாசன திட் டங்களை மேம்படுத்துவது, தரமான விதைகளை அளிப்பது, அறு வடைக்கு பிறகான சேதங்களை தவிர்ப்பது போன்றவற்றில் புதிய முறைகளை மேற்கொள்கிற பட்சத் தில் விவசாயிகள் வருமானம் அடுத்த ஆறு ஆண்டுகளில் இரட்டிப் பாக வளரும் என்று குறிப்பிட்டுள் ளார்.

டெல்லியில் நடந்த புளூம்பெர்க் இந்தியா பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர், கடந்த காலங்களில் விவசாயிகளின் வருமானம் குறை வாக இருந்துள்ளது. இதை 2022 ஆண்டுக்குள் இரண்டு மடங் காக அதிகரிக்க அரசு இலக்கு வைத் துள்ளது. இது மிகப் பெரிய சவால் என்றும் குறிப்பிட்டார்.

சிறந்த உத்திகளோடு இந்த திட்டத்தை மிக தெளிவாக வடி வமைத்துள்ளோம். இதை நடை முறைப்படுத்துவதற்கு போதுமான வளம், திறமையான நிர்வாகம் உள்ளதால் இந்த இலக்கு நிச்சயம் நிறைவேறும் என்றும் குறிப் பிட்டார்.

பிரதமர் மோடி குறிப்பிட்ட 7 முக்கிய உத்திகள் பின்வருமாறு:

$

பாசன திட்டங்களுக்கு முன்னு ரிமை கொடுக்கப்படும். அதிக நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு துளியிலும் பயிர் என்பதுதான் இலக்கு.

$

ஒவ்வொரு பகுதியின், மண் வளம் சார்ந்து தரமான ஊட்டச் சத்தான விதைகளை அளிப்பு.

$

கிடங்கு பாதுகாப்பில் மிகப் பெரிய முதலீடு. தொடர் குளிர்பதன வசதியின் மூலம் அறுவடைக்கு பின் சேதாரங்களை தவிர்ப்பது.

$

உணவு பதப்படுத்தல் துறையில் மதிப்புக் கூட்டு பொருட்களை ஊக்கப்படுத்துவது.

$

தேசிய அளவிலான விவசாய சந்தையை உருவாக்குவது. இடைத் தரகர்களை நீக்கி நாடு முழுவதும் 585 இணைய சந் தையை உருவாக்குவது.

$

புதிய பயிர் காப்பீடு திட்டத்தைக் கொண்டு வருவது. இதன் மூலம் காப்பீட்டுக்கான ரிஸ்க் குறைந்து மலிவு விலையில் கிடைக்கும்.

$

தேனி வளர்ப்பு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்ட விவ சாய துணை தொழில்கள் ஊக்கப்படுத்தப்படும்.

இந்த திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் இலக்கை எட்ட முடியும் என தான் நம்புவதாக மோடி குறிப்பிட்டார். மேலும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதில் இந்த கொள்கையில் விவசாயிகளை மையப்படுத்திய புதிய வருமானம் சார்ந்த பண்ணைகளையும் உள்ளடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக மோடி கூறினார்.

வேலை வாய்ப்பு உருவாக்கம் மத்திய அரசின் முக்கிய முன்னுரிமை திட்டங்களில் ஒன்று என்று மோடி குறிப்பிட்டார். இந்தியா முதலீட்டுக்கு அருமையான நாடு, ஏராளமான தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in