

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. தொழில் புரிவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தருவதில் இந்தியா சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. எனது சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை. இந்தியா வின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார்
புது டெல்லியில் நேற்று நடை பெற்ற ``முன்னேறும் ஆசியா’’ மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆசிய பொருளாதார வளர்ச்சி யில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. சர்வதேச அளவில் பொருளாதார சூழல் தேக்க நிலையில் இருந்தாலும் இந்தியா வின் பேரியல் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது
ஒதுக்கீட்டுக் கொள்கையை சர்வதேச செலாவணி நிதியம் இறுதி செய்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சீர்திருத்தம் பொருளாதார மாற்றத்திற்கு உதவும். அறிவார்ந்த மக்கள் 21-ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக கூறுகிறார்கள். அதில் இந்தியா மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. நாங்கள் உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை கீற்றோடு இருக்கிறோம்.
உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்ற கருத்தை இந்தியா தகர்த்து விட்டது. பல்வேறுபட்ட தரப்பினரை உடைய நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, சமூக நிலைத்தன்மை போன்றவற்றை எப்படி சரியாக கையாளுவது என்பது இந்தியாவால் மட்டுமே முடியும்.
எனது கனவு மாற்றத்தை அடைந்த இந்தியாவை உருவாக் குவது. விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக்குவது என்ற நோக்கத் துடன்தான் நாங்கள் செயல் பட்டு வருகிறோம். கிராமம் மற்றும் வேளாண்மைத் துறையில் முதலீட்டை அதிகரிப்பது போன்ற வற்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில் பெரும்பான் மையான மக்கள் இதையே வாழ்வதாரமாக கொண்டிருக் கிறார்கள். மேலும் வேளாண்மை சந்தையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதே போன்று சாலை மற்றும் ரயில்வே துறையில் பொது முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் அதுமட்டு மல்லாமல் நமது மக்களை இணைக்கக் கூடியதாகவும் இருக்கும். பொது முதலீடும் தேவை யான ஒன்று இப்போது தனியார் முதலீடு மந்தமாக இருக்கிறது.
நிதியை உள்ளடக்கிய நிறைய திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். வங்கி கணக்கு இல்லாத 20 கோடி மக்களை வங்கி அமைப்புக்குள் சில மாதங்களிலேயே கொண்டு வந்திருக்கிறோம்.
மேலும் உலகிலேயே மிகப் பெரிய அளவில் வெற்றியை கண்ட திட்டமான சமையல் எரிவாயுக்கு நேரடி மானியத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இதை உணவு, மண்ணெண்ணெய், உரங்கள் ஆகியவற்றிக்கு விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தற்போது அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் தொழில் புரிவதற்கு உகந்த சூழ்நிலை உருவாக்கித் தரும் நாடுகளில் மிக உயர்ந்த இடத்தில் இந்தியா உள்ளது.
2015-ம் ஆண்டில் உற்பத்தி குறியீடுகளும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. நிலக்கரி உற்பத்தி, மின்சாரம், யூரியா, உரங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.
தற்போது தொழில் முனை வோர்கள் அதிகமாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா சர்வதேச அளவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்-கள் உருவாவதில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும் அண்டை நாடுகளுடன் எப்பொழுதும் நட்புடன் இருக்கவே விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.