கச்சா எண்ணெய் சரிந்த சூழ்நிலையில் கிங்ஃபிஷர் செயல்படவில்லை என்பதுதான் என் வருத்தம்: விஜய் மல்லையா கருத்து

கச்சா எண்ணெய் சரிந்த சூழ்நிலையில் கிங்ஃபிஷர் செயல்படவில்லை என்பதுதான் என் வருத்தம்: விஜய் மல்லையா கருத்து
Updated on
1 min read

விஜய் மல்லையாவுக்கு கொடுத்த கடனை வசூல் செய்ய வங்கிகள் போராடிக் கொண்டிருக் கும் போது, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் இந்த சூழ்நிலையில் கிங்ஃபிஷர் செயல்படவில்லை என்பதே என்னுடைய வருத்தம் என்று விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார்.

கிங்ஃபிஷர் செயல்படவில்லை என்பதை தவிர எனக்கு வேறு வருத்தங்கள் இல்லை என மல்லையா தெரிவித்திருக்கிறார்.

2014-ம் ஆண்டு ஜூன் மாதத் துக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 75 சதவீதம் சரிந்துள்ளன. இதன் காரணமாக விமான எரிபொ ருள் விலை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்தது. இதன் காரண மாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கடந்த காலாண்டில் நிகர லாபம் ஈட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி நெருக்கடி காரணமாக விஜய்மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் அக்டோபர் 2012 முதல் தனது செயல்பாட்டை நிறுத்தியது. வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிறு வனம் பணம் தர வேண்டி இருக் கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு கருத்தை விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார்.

மேலும் விஜய் மல்லையா கூறியதாவது.

என்னுடைய 28 வயதில் இருந்து யூபி குழுமத்தை நடத்தி வருகிறேன். நான் நிரூபிக்க ஏதும் இல்லை. இந்தியாவின் மிகப் பெரிய பியர் நிறுவனத்தை நிறுவி னேன். இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பிரிட் நிறுவனத்தை நிறுவி னேன். ஆமாம், கிங்ஃபிஷர் நிறு வனம் தோற்றுவிட்டது. இந்த நிறுவனம் தோற்க பல நியாய மான காரணங்கள் இருக்கின்றன. முட்டாள் தனமான விஷயங்களால் இந்த நிறுவனம் தோற்கவில்லை.

நான் இங்கிலாந்தில் நீண்ட காலமாக இருக்கிறேன். இதில் புதிதாக ஏதும் இல்லையே. நான் என் குடும்பத்துடன் என்னுடைய நேரத்தை செலவு செய்கிறேன்.

ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியில் நான் தலைமை ஆலோசகராகவும் என் மகன் சித்தார்த் இயக்குநராகவும் இருக்கிறார். அணியின் திட்டத் தை வகுக்கும் குழுவில் நானும் இருக்கிறேன். அதனால் போட்டி கள் நடக்கும் போது நானும் இருப் பேன் என்று விஜய் மல்லையா கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in