நவம்பரில் அதிக டிராக்டர்களை விற்று சோனாலிகா சாதனை!

நவம்பரில் அதிக டிராக்டர்களை விற்று சோனாலிகா சாதனை!
Updated on
1 min read

இந்தியாவில் டிராக்டர் உற்பத்தியில் பிரபலமான, ஏற்றுமதியில் முதலிடத்தை வகிக்கும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம், தொடர்ந்து டிராக்டர் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இத்துறையின் விற்பனை அளவை விட நிறுவனம் அதிக எண்ணிக்கையில் நவம்பர் மாதத்தில் டிராக்டர்களை விற்று சாதனை புரிந்துள்ளது. நவம்பரில் டிராக்டர் விற்பனை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனையில் சோனாலிகாவின் பங்கு 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021 நவம்பரில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 11,909 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது.

நவம்பர் மாதத்தில் சோனாலிகா டிராக்டர் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியில் தொடர்ந்து முதலிட அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரையில் நடப்பு நிதி ஆண்டின் 8 மாத காலத்தில் 22,268 டிராக்டர்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த அளவானது கடந்த நிதி ஆண்டு முழுவதும் ஏற்றுமதி செய்த அளவாகும். முந்தைய ஆண்டின் முதல் 8 மாதங்களில் 12,937 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது 72.2 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 3,225 டிராக்டர்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஏற்றுமதி செய்த டிராக்டர்களின் எண்ணிக்கை 1,607 ஆகும். ஏற்றுமதி அளவு 100.7% அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு குறித்து சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “புதிய மாடல்களை சர்வதேச தரத்திற்கு இணையாக உரிய நேரத்தில் அறிமுகம் செய்தது, உரிய வேளாண் சாதனங்களை சந்தையில் அறிமுகம் செய்தது, சந்தையின் தேவைக்கேற்ப ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரித்து உரிய நேரத்தில் சந்தையில் கிடைக்க வழி வகை செய்தது ஆகிய அனைத்தும் சோனாலிகாவின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்தின் விவசாயிகளின் தேவைக்கேற்ப டிராக்டர்களைத் தயாரித்து அளிப்பதுதான் நிறுவனத்தின் வெற்றிக்கு பிரதான காரணமாகும். விவசாயிகளுடன் ஒன்றிணைந்து வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நுட்பத்தை நிறுவனம் அளித்துவருகிறது.

இத்தகைய பிரதான காரணங்கள் ஒருங்கிணைந்ததால் நவம்பர் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான டிராக்டர்கள் விற்பனையானதில் மொத்த சந்தை பங்களிப்பு 16% ஆக உயர்ந்துள்ளது. நவம்பரில் சந்தை பங்களிப்பு 1.4% அதிகரித்துள்ளது. கூடுதலாக நிறுவனம் ஏற்றுமதியில் புதிய சாதனையையும் நவம்பர் மாதத்தில் படைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் 22,268 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சோனாலிகாவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணர்கள் தொடர்ந்து புத்தாக்கச் சிந்தனையில் புதிய தயாரிப்புகளை வடிவமைத்து குறைந்த செலவில் விவசாயிகள் வளமான வாழ்க்கையை எட்ட வழிவகுத்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in