வரிச்சலுகை கடன் பத்திரங்கள் மூலம் 1,788 கோடி ரூபாய் திரட்டும் ஹட்கோ

வரிச்சலுகை கடன் பத்திரங்கள் மூலம்  1,788 கோடி ரூபாய் திரட்டும் ஹட்கோ
Updated on
1 min read

வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு நிறுவனமான ஹட்கோ ரூ. 1,788 கோடி திரட்ட திட்டமிட் டுள்ளது. வரிச்சலுகை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் இந்த தொகையைக் கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்கள் மற்றும் குறைந்த வரு மான பிரிவினருக்கான வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

தற்போது இரண்டாவது முறை யாக ரூ.1788.50 கோடிக்கு வெளியி டுகிறது. தகுதிவாய்ந்த நிறுவ னங்கள், கார்ப்பரேட்டுகள், பெரு முதலீட்டாளர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த பாண்டுகளை வாங்கலாம் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் முறை யாக வரிச்சலுகை பாண்டுகளை பொது வெளியீடு மூலம் கொண்டு வந்து ரூ.1,711.50 கோடி திரட்டியது.

நடப்பாண்டில் ரூ.5,000 கோடி யை திரட்ட மத்திய அரசிடம் ஹட்கோ அனுமதி வாங்கியுள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் குறைந்த வருமான பிரிவினர் மற்றும் பொரு ளாதாரத்தில் பின் தங்கியவர்க ளுக்கான வீடு கட்டும் திட்டங்க ளுக்கு மற்றும் அது தொடர்பான வேலைகளுக்கு நிறுவனம் திட்ட மிட்டபடி பயன்படுத்த மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித் துள்ளது. இந்த பாண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.04 முதல் 7.39 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். 15 முதல் 15 ஆண்டுகள் முதலீட்டுக் காலமாக இருக்கும்.

சில்லரை முதலீட்டாளர்களில் ரூ.10 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு 7.29 முதல் 7.69 சதவீதமாக இருக்கும். இதற்கும் முதலீட்டுக் காலம் 10- 15 ஆண்டுகளாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in