Published : 20 Mar 2016 11:57 AM
Last Updated : 20 Mar 2016 11:57 AM

மியூச்சுவல் பண்ட் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: ‘செபி’ அறிவுறுத்தல்

மியூச்சுவல் பண்ட் துறையில் மேலும் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்று `செபி’ தன்னுடைய சுற்றறிக்கை யில் தெரிவித்திருக்கிறது. `செபி’ தன்னுடைய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

பட்டியலிட்ட நிறுவனங்களை போல மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் சம்பளம், தவிர ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அதே போல நிறுவனத்தின் சராசரி சம்பளத்தை விட சி.இ.ஓ சம்பளம் எவ்வளவு அதிகம் என்பதையும் வெளியிட வேண்டும்.

அதேபோல மியூச்சுவல் பண்ட் கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது தர மதிப்பீட்டு நிறு வனங்களை மட்டுமே நம்பாமல், சொந்தமாக தர மதிப்பீட்டினை உருவாக்க வேண்டும். இதற்கான கொள்கைகளை மியூச்சுவல் பண்ட்கள் உருவாக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்ட் முதலீட் டாளர்களுக்கு முதலீட்டு தகவல் களை அனுப்பும் போது பல விஷயங்களை கூடுதலாக செய்ய வேண்டும் என்று செபி அறிவுறுத்தி இருக்கிறது. அதில் பண்டின் எக் பென்ஸ் விகிதம், பண்ட் மேனேஜ ரின் பதவி காலம், பண்டில் செய்யப் பட்ட முதலீடுகள், விநியோகஸ் தரின் கமிஷன் உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும்.

விநியோக நிறுவனங்களுக்கு பணமாக கிடைக்கும் கமிஷன் தவிர, பரிசுகள், பயணங்கள், நிகழ்ச்சிகள் என அனைத்து வகையான தகவல்களையும் வாடிக்கையாளார்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x