

நிதிச் சேவையை அளித்துவரும் ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் கடன் பத்திரங்களில் மிக எளிதாக முதலீடு செய்ய வசதியாக பான்ட்ஸ்கார்ட் (bondscart) என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முன்னோடியாகத் திகழும் ஜேஎம் பைனான்சியல் குழுமம் தற்போது முதலீட்டாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலமாக பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மனித குறுக்கீடுகள் ஏதுமின்றி, அதி நவீன தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த இணையதளம், முழுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. அதனால், ஒருவர் தனது தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்பை இதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
எளிமையான, நேரடி கடன் பத்திர முதலீட்டில் தொடங்கி, பிற நவீன வாய்ப்புகளாக, ஏராளமான மாற்றுத் திட்டங்களும் பான்ட்ஸ்கார்ட் தளத்தில் தற்போது இடம்பெற்றுள்ளன.
இந்நிறுவனத்தின் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தேர்வான இத்திட்டங்கள் நவீன தொழில்நுட்பங்களின் மூலம் வழங்கப்படுகிறது.
தீவிர கவனமும், ஈடுபாடும் கொண்ட ஆய்வுகளின்படி தேர்வு செய்யப்பட்ட நிரந்தர வருவாய் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட இத்தளம், முதலீட்டின் பல்வேறு பரிமாணங்கள் குறித்துக் கற்பித்து, அதன் அடிப்படையில் தாங்களே விவரமறிந்து முடிவெடுக்கும் நிலைக்கு முதலீட்டாளர்களை தயார் செய்கிறது. மேலும், இந்தக் கடன் சார்ந்த திட்ட முதலீட்டில் இருந்து வெளியேற நினைப்போருக்கு, அதற்கான வாய்ப்புகளை வழங்கி, சரியான நேரத்தில் அத்திட்டங்களில் இருந்து விலகவும் துணை நிற்கிறது.
வரும் நாட்களில் மேலும் பல முன்னேறிய முதலீட்டு வாய்ப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க பான்ட்ஸ்கார்ட் திட்டமிட்டு வருகிறது. இது தற்போது இணையதளத்திலும், ஆண்ட்ராய்ட் மென்பொருள் கொண்ட கைபேசி மற்றும் ஐ.ஓ.எஸ். (iOS) மென்பொருள் கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
“முதலீட்டு ஆலோசனை நிறுவனங்களிலேயே நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் என்ற பெயரெடுக்க விரும்பிய எங்களது இலக்கின் திசையில் பான்ட்ஸ்கார்ட் அமைந்துள்ளது. அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களுக்கும் சேவை அளிக்க ஏற்றபடி வசதிகளை உருவாக்க நினைக்கும் எங்கள் பணியில் இந்தத் தளமும் உதவுகிறது.
முதலீட்டாளர்கள் விரும்பும் நிரந்தர வருவாய் வாய்ப்பு தரும் பல்வேறு திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்புகிறோம்” என நிறுவனத்தின் நிதிப் பிரிவு மேலாண் இயக்குநர் விஷால் கம்பானி தெரிவித்துள்ளார்.