Published : 22 Mar 2016 09:58 AM
Last Updated : 22 Mar 2016 09:58 AM

தொழில் கலாச்சாரம்: பேரரசுகளின் தாயகத்தில் தொழில் வாய்ப்புகள்

டிசம்பர் 24 நள்ளிரவு. எல்லோரும் தூங்கும் நேரம். சிகப்பு டிரெஸ், சிகப்புத் தொப்பி, நீண்ட வெள்ளைத் தாடி, மீசையோடு ஒரு தாத்தா வட துருவத்திலிருந்து வருகிறார். அவர் முதுகில் ஒரு பெரிய சிகப்புப் பை. அது நிறையப் பொம்மைகள், பரிசுப் பொருட்கள். புகைபோக்கி வழியாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வருகிறார். அலங்காரக் கிறிஸ்மஸ் மரத்தில் குழந்தைகளின் பரிசுகளை வைக்கிறார். வந்ததுபோல் மறைகிறார். பொழுது விடிந்ததும், குழந்தைகள் கிறிஸ்மஸ் தாத்தா சான்டா கிளாஸ் தந்த பரிசுகளைப் பார்த்துக் குதூகலிக்கிறார்கள்.

சான்டா கிளாஸ் பற்றித் தெரிந்து கொள்ள, நாம் கி.பி. மூன்றாம் நூற்றாண் டுக்குப் போகவேண்டும். இன்றைய துருக்கி நாட்டில் இருக்கும் பட்டாரா என் னும் ஊரில் செயின்ட் நிக்கோலஸ் என்னும் கிறிஸ்தவப் பாதிரியார் வசித் தார். எல்லோருக்கும் உதவும் நல்லவர். இவரை அடிப்படையாக வைத்துத்தான் கிறிஸ்மஸ் தாத்தா என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள். செயின்ட் நிக்கோலாஸ் என்னும் பெயர்தான், நாளடைவில் மருவி, சான்டா கிளாஸ் என்று ஆகிவிட்டது.

கிறிஸ்மஸ் தாத்தாவின் ``நிஜம்” (ஒரிஜினல்) பிறந்த தேசம்.

துருக்கி நாட்டின் ஒரு பாகம் ஐரோப் பாக் கண்டத்திலும், இன்னொரு பாகம் ஆசியக் கண்டத்திலும் இருக்கிறது. 1973 இல் கட்டப்பட்ட பாஸ்ஃபரஸ் என்னும் பாலம் துருக்கியின் இரண்டு பகுதிகளையும் (கண்டங்களையும்) இணைக்கிறது. நம் அயல்நாட்டு வியாபாரத்துக்கும் துருக்கி முக்கியமான நாடு. நம் ஏற்றுமதி 32,756 கோடிகள், இறக்குமதி 8,936 கோடிகள். .

பூகோள அமைப்பு

துருக்கி மத்தியதரைக் கடலின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. வடக்கில் கருங்கடல், மேற்கே ஏகியன் கடல். அண்டைய நாடுகள் - கிழக்கில் ஜார்ஜியா, ஆர்மினியா, அஜர்பெய் ஜான், இரான்: மேற்கில் கிரீஸ், பல்கேரி யா: வடக்கிலும், வடமேற்கிலும் ரஷ்யா, உக்ரேன், ருமேனியா: தெற்கில் சிரியா, ஈராக்.

நிலப்பரப்பு 7,83,562 சதுர கிலோ மீட்டர்கள். மலைகள் நிறைந்த பிர தேசம். தங்கம், இரும்புத் தாது, செம்பு, குரோமியம், ஆன்ட்டிமனி, பாதரசம், கரி, மாக்னெசைட் போன்ற பல தாதுக்கள் கிடைக்கின்றன. தலைநகரம் அங்காரா.

சுருக்க வரலாறு

கற்காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்த பகுதி. இப்பகுதியில் உருவான ஹிட்டைட் பேரரசு கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 13 - ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது.

கி.மு. 1200 முதல் கிரேக்கர்கள் குடியேறத் தொடங்கினார்கள். கி.மு. 6, 5 ஆம் நூற்றாண்டுகளில் பாரசீக ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றியது. கி.மு. 334 இல் மாவீரன் அலெக்சாண்டர் ஆசியா மைனரைத் தன் கொடியின் கீழ்க் கொண்டுவந்தார்.

பிறகு, ரோமர்கள் நாட்டைப் பிடித்தார்கள். பின், பைசன்டியப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி. 1243 இல், துருக்கியர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் நிறுவிய ஓட்டோமான் பேரரசு 623 ஆண்டுகள் வரை நிலைத்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஓட் டோமான் பேரரசு சரியத் தொடங்கியது. பல நாடுகள் பிரிந்துபோயின. 1914. முதல் உலகப்போரில் துருக்கி ஜெர்மனியோடு சேர்ந்தது. தோல்வியால், துருக்கி முழு சாம்ராஜ்ஜியத்தையும் பறி கொடுத்தது. 1919 இல், முஸ்தஃபா கேமல் என்னும் ராணுவத் தலைவர் ஆளும் சுல்தானுக்கு எதிராகப் புரட்சிக் கொடி தூக்கினார். 1923 இல் சுல்தான் ஆட்சிக்கு முடிவு கட்டினார். நாட்டைக் குடியரசாக அறிவித்தார். ஜனாதிபதியானார். 1938 இல் அவர் மறைவதுவரை, 15 ஆண்டுகள் நல்லாட்சி தந்தார். மதச்சார்பற்ற நாடு, பெண்கள் சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி எனப் பல வகைகளில் இன்றைய துருக்கியை உருவாக்கியவர் கேமல்தான். இதனால், மக்கள் அன்போடு, அட்டாடர்க் என்னும் பட்டம் தந்தார்கள். அட்டாடர்க் என்றால், தேசத் தந்தை என்று துருக்கிய மொழியில் பொருள். கேமல் அட்டாடர்க் என்று நாம் இவரை அழைக்கிறோம்.

மக்கள் தொகை

சுமார் 7 கோடி 94 லட்சம். 99.8 சதவீதத்தினர் முஸ்லிம்கள். எஞ்சிய சிலர் பிற மதத்தினர். துருக்கிய மொழி ஆட்சி மொழி. கல்வியறிவு 95 சதவீதம். ஆண் கள் 98 சதவீதம், பெண்கள் 92 சதவீதம்.

ஆட்சிமுறை

மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு. நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. மக்களால் நேரடியாக 5 வருட ஆட்சிக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மக்கள் தேர்ந்தெடுக்கும் 550 பேர் அடங்கிய Grand National Assembly என்னும் ஓரவைப் பாராளுமன்றம். இந்த அங்கத் தினர்கள் தெரிந்தெடுக்கும் பிரதமர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.

பொருளாதாரம்

பொருளாதார வளர்ச்சி கண்ட நாடு. சேவைத்துறையின் பங்கு 68 சதவீதம். பலமான வங்கித் துறை, சுற்றுலா வசதிகள், போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவை சேவைத்துறையின் அடித்தளங்கள். தொழில் துறை 28 சதவீதம். இரும்பு, உருக்குத் தயாரிப்பில் உலகில் எட்டாம் இடம் வகிக்கிறது. சுரங்கத் தொழில், ஜவுளி, பெட்ரோலியம், கார்கள், ராணுவத் தள வாடங்கள், மரப்பொருட்கள், காகிதம், உணவுவகைகள் உற்பத்தி ஆகியவை முக்கியமானவை. 2006 இல் பெட் ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. பொருளா தார வளர்ச்சிக்கு உதவுகிறது. விவசா யம் 4 சதவீதம். புகையிலை, பருத்தி, ஆலிவ், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவை முக்கிய பயிரினங்கள்.

நாணயம்

துருக்கி லிரா (Turkish Lira). 23 ரூபாய் 29 காசுகளுக்கு சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

நம் ஏற்றுமதி ரூ. 32,756 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை போக்கு வரத்து வாகனங்கள், விமானங்கள், இயந்திரங்கள், நூலிழைகள், ரசாய னங்கள், பிளாஸ்டிக்ஸ், தோல் பதனி டும் பொருட்கள், சாயப் பொருட்கள். இறக்குமதி ரூ. 8,936 கோடிகள் பெட் ரோல், எந்திரங்கள், உப்பு, கந்தகம், கரி, தங்கம், வைரங்கள், இரும்பு, உருக்கு, அலுமினியம், மரக்கூழ், கம்பளி உலோகத் தாதுக்கள், இரும்பு, உருக்கு, எலெக்ட்ரானிக் கருவிகள் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

விசிட்

பூகோள அமைப்பால், பகுதிக்குப் பகுதி பருவநிலை மாறுபடும். போக வேண்டிய இடத்தின் பருவநிலைப்படி விசிட்டைத் திட்டமிடுங்கள். ஜூன், ஜூலை. ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான பிசினஸ்மேன்கள் விடுமுறையில் போவார்கள். ஆகவே, இந்த மாதங்களைத் தவிர்க்கவும்.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். டிராபிக் ஜாம்கள் அதிகம். ஆகவே, பயணத்துக்கு அதிக நேரம் ஒதுக்கிப் புறப் படுங்கள். சந்திப்புக்களுக்கு முன்னரே நேரம் குறித்துக்கொள்ளுதல் அவசியம். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், ஞாயிறு தான் விடுமுறை நாள்.

விசிட்டிங் கார்டுகள் அவசியம். பெரும்பாலான பிசினஸ்மேன்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் தெரியும். சந்திப்பவர்களின் மொழிப்புலமையைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப, தேவைப்பட்டால், மொழிபெயர்ப்பாளர் களை அமர்த்திக்கொள்வது நல்லது. கை குலுக்குதல்தான் வரவேற்பு முறை. அழுத்தமாகக் கை குலுக்குவார்கள். வயதில் மூத்தவர்களுக்குத் தனி மரியா தை தரும் பாரம்பரியம் கொண்ட சமுதா யம். உங்களை அறிமுகம் செய்யும் போது, வயதில் அதிகம் மூத்தவரோடு முதலில் கை குலுக்குங்கள். சந்திக்கும் எல்லோரோடும் கை குலுக்கவேண்டும்.

பிசினஸ் பேசும் முன், குசலம் விசாரிப் பது வழக்கம். ஆகவே, உடனேயே பிசினஸ் சமாச்சாரங்களில் குதித்துவிடா தீர்கள். அவசரம் காட்டமாட்டார்கள். நிதானமாக முடிவெடுப்பார்கள்.

தலையை மேலும், கீழுமாக அசைத்தால், “ஆமாம்” என்று அர்த்தம். “இல்லை” என்பதற்கு நாம் தலையை இடமிருந்து வலமாக அசைப்போம். துருக்கியில் இதற்கு, “எனக்குப் புரிய வில்லை. இன்னொரு முறை சொல்லுங் கள்” என்று அர்த்தம். ``இல்லை” என்பதற்கு அவர்கள் உடல்மொழிகள் புருவத்தை உயர்த்துதல், இமைகளை மூடுதல், தலையைப் பின்னால் சரித்தல் ஆகியவை. பாக்கெட்டில் கைகளை வைத்துக்கொண்டு பேசக்கூடாது.

உடைகள்

கோட், சூட் தேவை. இவை அழுத்தமான கறுப்பு, நீல நிறங்களில் இருக்கவேண்டும்.

பரிசுகள் தருதல்

பரிசுகள் கட்டாயமில்லை. ஆனால், தரலாம். உங்கள் முன் திறந்து பார்க்கமாட்டார்கள்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x