Published : 17 Mar 2016 09:36 AM
Last Updated : 17 Mar 2016 09:36 AM

நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.7 சதவீதமாக இருக்கும்: நொமுரா கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 0.7 சதவீதமாக இருக்கும் என்று நொமுரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 1.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய பொருட்களின் விலை குறைந்ததால் பற்றாக்குறை குறைவாக இருக்கும் என்று நொமுரா கணித்திருக்கிறது.

இதற்கிடையே தொடர்ந்து 15-வது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.6 சதவீதம் (கடந்த வருட பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது) குறைந்து 2,073 கோடி டாலராக இருக்கிறது. அதேபோல இறக்குமதியும் 5.03 சதவீதம் குறைந்து 2,728 கோடி டாலராக இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் வர்த்தக பற்றாக்குறை 654 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய பிப்ரவரி மாதத்தில் 674 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரியில் அதிகரித்த தங்க இறக்குமதி பிப்ரவரியில் 29.49 சதவீதம் குறைந்தது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று நொமுரா கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x